March 20, 2018
தண்டோரா குழு
மலையாளி சுஹ்ரத் சங்கம் (மாஸ்) மற்றும் நடிகர் மோகன்லால் தலைவராகவும் ஒருதலைராகம் புகழ் நடிகர் ரவீந்தர் இயக்குராகவும் உள்ள கொச்சின் மெட்ரோ ஷார்ட் பிலிம் பெஸ்டிவலும்(Kochin Metro Short Film Festival ) இணைந்து நடத்தும் கோயமுத்தூர் சர்வதேச குறும்பட விழா 2018 வருகிற ஆகஸ்ட் மாதம் கோவையில் நடைபெறவுள்ளது.
இதில், கல்லூரி மாணவர்களுக்கான கேம்பஸ் குறும்படம் மற்றும் பொதுவானவை என இரண்டு பிரிவுகளாக குறும்படப்போட்டிகள் நடைபெறவுள்ளது.போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கோல்டன் டோவ் விருது மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம் குறித்த பயிற்சி,கருத்தரங்குகள்,பெண்களுக்கான குறும்பட விழாக்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குறும்பட விழாக்கள் குர்திஷ் படங்கள் திரையிடல் ஆகியவை நடைபெறவுள்ளது.
முன்னதாக மாஸ் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தை கொச்சின் மெட்ரோ ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் இயக்குநரும் நடிகருமான ரவீந்தர் துவக்கி வைத்தார்.இதில், கோயமுத்தூர் சர்வதேச குறும்பட விழாவின் ஒருங்கிணைப்பாளராக ஜோட்டி குரியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதில், கோயமுத்தூர் சர்வதேச குறும்பட விழா 2018 லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும்,மாஸ் செயலாளர் சி.கே அஜய்குமார்,துணை செயலாளர் மாயா துளசிதரன்,துணைத்தலைவர்கள் சுபாஷ்,என்.மோகன் குமார், மாஸ் மகளிர் குழு தலைவி அனிதா சுபாஷ் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்கள்,விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் கொண்ட குழு தலைமையில் கோயமுத்தூர் சர்வதேச குறும்பட விழாவின்ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிரமாண்டமான நடைபெறவுள்ள கோயமுத்தூர் சர்வதேச குறும்பட விழா 2018குறித்த முழு விவரமும் விரைவில் வெளியிடப்படும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.