• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரதமர் திட்டத்தின் கீழ் பணம் வாங்கி தருவதாக கூறி நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது

June 16, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் பெரியவர்கள் மூதாட்டிகள் போன்றவர்களிடம் பிரதமர் திட்டத்தின் கீழ் பணம் வாங்கி தருவதாக கூறி நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வயதான பெண்கள் மூதாட்டிகள் போன்றவர்களிடம் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் பணம் வாங்கித் தருவதாகவும் அதற்கு அணிந்திருக்கும் நகைகளை எல்லாம் கலட்டி வைத்தால்தான் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலபேரிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து பலமுறை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது புகாரின் பேரில் பல நாட்களாக விசாரணை நடத்தி வந்த பந்தய சாலை காவல்துறையினர் இன்று அந்த கொள்ளையனை கையும் களவுமாக கோவை அரசு மருத்துவமனையில் பிடித்தனர்.

அவனிடமிருந்து 8 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து அவனிடம் விசாரணை நடத்துகையில் அவன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்திரவேல் என்பதும் கோவை மட்டுமின்றி கள்ளக்குறிச்சி பழனி சென்னை ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல இடங்களில் இதே போன்று கொள்ளையடித்து உள்ளதும் அவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவனை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க