கோவையில் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் திருத்தோரோட்டம் இன்று நடைபெற்றது.
மதியம் 2 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு தேர்முட்டி, ஒப்பணக்கார வீதி,பிரகாசம் வழியாக மீண்டும் தேர்முட்டியை வந்தடைந்தது.மதியம் வரை தேர்முட்டி பகுதியில் தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காலையில் இருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர்முட்டி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நீர்மோர் உணவுகள் பழங்கள் ஆகியவற்றை வழங்கினர். கோனியம்மன் கோவிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே கோவிலிலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்