• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேசுவர மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

November 19, 2021 தண்டோரா குழு

கோவையில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேசுவர மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

கோவையை அடுத்த மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேசுவர சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, மகா தீப வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து மலையில் அமைந்துள்ள மூலவரான சிவனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவில்,பக்தர்களுடன் கோவிலை வலம் வந்து, நந்தி தேவருக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.தொடர்ந்து அடிவார பகுதியிலுள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க