• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்

November 15, 2019 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே 16 அடி ராஜநாகம் பிடிபட்டது பாம்பை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊர்பகுதிகள் வரும் அதை தொடர்ந்து வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதிக்குள் துரத்தி விடப்படும். இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதி ஒட்டியுள்ள தினேஷ்குமார் சொந்தமான தோட்டத்தில் நீளமான அரியவகை பாம்பு உள்ளதாக வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவரான சந்தோஷ் குமார் தனது குழுவினர் வந்து பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் அருகே பாம்பு இருப்பதை பார்த்த குழுவினர் உடனடியாக பாம்பை வெளியே கொண்டு வந்தனர். அப்போது தான் தெரிய வந்தது 16 அடி நீளமுள்ள ராஜநாகம் என தெரியவந்தது. சந்தோஷ் குமார் மிக கவனமாகவும், பாம்பை பத்திரமாக பிடித்து சாக்கு பையில் போட்டு போளுவம்பட்டி வனத்துறையினர் உதவியுடன் வைதேகி நீர் வீழ்ச்சி பகுதியான அடர்ந்த வனத்தில் விடப்பட்டது.

16 அடி ராஜநாகத்தை பிடிப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். பாம்பு என்றாலே படபடக்கும் ஆனால் இந்த ராஜ நாகத்தை லாவகரமாக கையாண்ட சந்தோஷ்குமார் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க