• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

January 25, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த பிரபல மாடல்கள் பங்கேற்று, ஒய்யார நடை போட்டு, மேடையில் வலம் வந்தது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அனைத்து துறைகளிலும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்நிலையில் ஆடை அலங்கார துறையில் இந்திய அளவில் சாதிக்க துடிக்கும், இளம் தொழில் முனைவோர்கள் N eight பேஷன் மீடியாவை நடத்தி வருகின்றனர்.

இதன் இயக்குனர்களான சண்முகம், பாலசுப்ரமணியம், ஜிக்கு சாக்கோ,ஜிம்சி சூசன் சாக்கோ ஆகிய நான்கு பேர் இணைந்து சுற்றுச்சூழல்,இயற்கை பாதுகாப்பு போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான தென்னிந்திய அளவிலான N Eight பேஷன் லீக் எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில்,சென்னை,பெங்களூரு,கேரளா உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் இருந்து, பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள், கலந்து கொண்டனர்.மின்னொளியில் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடை போட்டு வந்த போட்டியாளர்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். நிகழ்ச்சியில் பிரபல சின்னதிரை நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் ராஜீவ் பிள்ளை உட்பட முக்கியஸ்தர்கள் நடுவர்களாக பங்கேற்று, சிறந்த ஆடைகளை வடிவமைத்த குழுவினருக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி கவுரவித்தனர்.

மேலும் படிக்க