• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய குழந்தைகளின் நடனம்

January 13, 2020

கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் இந்திய பாரம்பரிய நடனங்களை அது குறித்த தகவல்களோடு குழந்தைகள் நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கோவை கதிர்நாயக்கன்பாளையம் ,கணபதி நகர் பகுதியில் அமைந்துள்ளது தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் சி.பி.எஸ்.இ.பாடத்திட்ட பள்ளி.இந்த பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைவர் பால முகுந்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் பகுதி கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் யோகா ,கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பறையாட்டம்,படுகாஸ்,கதகளி,தாண்டியா போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை அது குறித்த பல்வேறு தகவல்களோடு நடனம் ஆடி அசத்தினர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் யோகா,கராத்தே போன்ற மாணவர்களின் பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளியின் செயல்பாடு குறித்து பாலமுகுந்தன் பேசுகையில்,தற்போதைய குழந்தைகளுக்கு கல்வியோடு பன்முக திறமைகளை ஊக்குவிப்பது அவசியம் எனவும்,அந்த வகையில் எங்களது பள்ளி குறிப்பாக யோகா,கராத்தே போன்ற கலைகளை பாடத்திட்டங்களோடு கற்று கொடுப்பதாக அவர் தெரிவித்தார். விழாவில் பள்ளியின் தாளாளார் பால புவனேஸ்வரி, முதல்வர் ராமச்சந்திரன் உட்பட மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க