May 20, 2021
தண்டோரா குழு
கோவை கோட்டைமேட்டில் உள்ள கொரோனா பேரிடர் உதவி மையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்தநிலையில் இன்று கோவை கோட்டைமேட்டில் உள்ள வின்சென்ட் சாலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனா பரிசோதனை முகாமை நடத்தி வருகிறது.
இந்த முகாம் இன்று மாலை 6 மணி வரை கொரோனா பேரிடர் உதவி மையத்தில்நடைபெறும்.கொரோனா பரிசோதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.