• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜக வேட்பாளருக்கு ஒரே ஓட்டு – வேட்பாளரின் பரிதாப நிலை !

October 12, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டில் நடந்த இடைதேர்தலில் திமுகவை சார்ந்த அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. இந்நிலையில்,
பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில்,
திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

குருடம்பாளையம் 9 ஆவது வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார். 147 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்வாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றார்.அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு

பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக், அக்கட்சியின் இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். “கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ளனர். அப்படி இருக்கும் போது அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை.அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டது தானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா?” என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

கோவையில் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு வாங்கியது குறித்து சமூக வலைதளங்களிலும் பலர் கிண்டலாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க