July 15, 2021
தண்டோரா குழு
கோவையில் அக்கம்பக்கம் பிரச்சனையில் பாஜக பிரமுகர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குறிச்சி ஆறுமுககவுண்டர் வீதியில் அரிசி கடை வைத்திருப்பவர் மாலதி. அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது தாயார் அமராவதி ஆகியோருக்கிடையே இன்று காலை வாக்குவாதம் மற்றும் கைகலப்பு நடந்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை அமராவதி அவரது உறவினர் ராஜனுடன் வந்து காலை நடந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளனர்.
அப்போது, வாக்குவாதம் ஏற்பட ராஜா கையில் வைத்திருந்த கத்தியை வைத்து மாலதியை மிரட்டியுள்ளார். இதற்கிடையில்,அங்கிருந்த மாலதியின் மகன் ஜீவாவும் பதிலுக்கு பேச. இருவருக்குமிடையே சண்டை அதிகமாகியது. கைகலப்பில் ராஜன் ஜீவாவை கத்தியால் காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஜீவாவின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது தனியார் மருத்துவமனையில் ஜீவாவும் அவரது தாயார் மாலதியும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீவா பா.ஜ.க சுந்தராபுரம் மண்டல செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் பா.ஜ.கவினர் திரளாக மருத்துவமனையில் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குனியமுத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.