• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜகவில் இணைந்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

May 28, 2019 தண்டோரா குழு

பா.ஜ.க வில் சேர்ந்தற்காக கோவை வீரகேரளம் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சந்தோஷ்குமாரின் உறவினர்கள் உட்பட 4 பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். ஜோசியரான இவர், இந்திய குடியரசுக் கட்சியில் மாநில செயலாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்திய குடியரசுக் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். இந்திய குடியரசுக் கட்சியில் இருந்த சிலரையும் பா.ஜ.கவில் இணைத்துள்ளார். இதன் காரணமாக சந்தோஷ் குமாருக்கும், அவரது சித்தப்பாவும் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவருமான விஜயகுமாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த 26 ஆம் தேதி விஜயகுமார், தனது மகன் கர்ணபிரசாத், மனைவி மது மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து சந்தோஷ் குமாரை மீண்டும் இந்திய குடியரசு கட்சியில் இணைய கோரி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அன்று மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சந்தோஷ்குமாரை, வீரகேரளம் மாநகராட்சி அலுவலகம் அருகே வழி மறித்த விஜயகுமார் மற்றும் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து வடவள்ளி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ் குமாரின் உறவினரான அவரது சித்தப்பா விஜயகுமார், மனைவி மது,அவரது மகன் கரண்பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோர் கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.அவர்களை வரும் ஜூன் 11 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி கண்ணன் உத்திரவிட்டார். ஏற்கனவே இந்த கொலை வழக்கில் ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க