• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜகவினர் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

January 1, 2020

பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொல்ல வேண்டும் என இஸ்லாமியர்கள் மத்தியில் பேசி அவர்களை கொலை செய்ய தூண்டிவிட்டு இரு சமுதாய மக்களிடையே கலவரத்தை உண்டாக்க முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை துடியலூர் காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

​கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசும்போது பாரத பிரதமரை முட்டாள் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் பேசியதோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அடிமை என்றும் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை களவாணி என்று தரக்குறைவாக விமர்சித்ததோடு, பிரதமரின் திருமண வாழ்க்கையையும் கேவலமாக பேசி உச்சகட்டமாக மோடி மற்றும் அமித்ஷா இருவரின் சோலியை முடித்தீர்ப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் ஒரு சாயப்பும் முடிக்கவில்லை என்று பேசியுள்ளார்.

ஆகவே இவர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து இரு சமுதாயத்திரனரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வன்மமாக பேசிய நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை இணைதளங்களில் பரப்புவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பாக துடியலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரத்திடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க