March 21, 2018
தண்டோரா குழு
கோவையில் பாஜகவினர் இன்று(மார்ச்21)திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதானால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில்,வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி திடீரென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்பு அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.