December 19, 2020
தண்டோரா குழு
கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:
மூலப்பொருட்களின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.இந்த விலை ஏற்றத்தால் பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதனிடையே வரும் 21ம் தேதி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை
தற்காலிகமாக விலக்கிக்கொள்வது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக பவுண்டரித்தொழிலை சார்ந்துள்ள வெட்கிரைண்டர், பம்பு மற்றும் மோட்டார் போன்ற தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
பவுண்டரித்தொழிலின் வாடிக்கையாளர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை புரிந்து கொண்டுள்ளனர்.இது போன்ற காரணங்கனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தோம்.
இவ்வாறு சிவசண்முக குமார் கூறினார்.