April 20, 2018
தண்டோரா குழு
கோவையில் பவுண்டரி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று(ஏப் 20) ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு தொழில்கள் செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில் பவுண்டரி (வார்ப்பட) தொழில்கள் செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கோவையில் பவுண்டரி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.கோவையில் அரசூர், மாணிக்கம் பாளையம்,கணபதி,தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும்,வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும்,மூன்று லட்சம் பேர் நேரடியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.