December 18, 2020
தண்டோரா குழு
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆதரவு மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது.
கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:
மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் ரூ.90 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதனிடையே இந்த போராட்டத்திற்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பில் 19 தொழில் அமைப்புகள் உள்ளன.இவை அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது முடிவு செய்துள்ளதாக போராட்டக்குழு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.