December 23, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில் கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியாகினர்.இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக கோவையில் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவின் பேரில் பழைய பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்பேரில் கோவை பெரியகடை வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் பழைய கட்டிடம் அடையாளம் காணப்பட்டது. தற்போது அப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.