• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பழமைவாய்ந்த மாகாளியம்மன் கோவிலின் 97வது ஆண்டு பிரம்ம உற்சவ திருவிழா

December 28, 2021 தண்டோரா குழு

பழமைவாய்ந்த மாகாளியம்மன் கோவிலின் 97வது ஆண்டு பிரம்ம உற்சவ திருவிழா கால்கோலுடன் துவங்கியது.

கோவை டவுன்ஹால் என்.எச் ரோட்டில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 97வது ஆண்டு பிரம்ம உற்சவ திருவிழா நடைபெறுகிறது.இதில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ,மற்றும் திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்திநகர் சீனிவாசன்,பகுதி கழக செயலாளர் பக்ருதீன், கிளை செயலாளர் வி.எச் ரோடு விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால் கோல் நடுதலுடன் மேல தாலங்களுடன் உற்சாகமாக இன்று விழாவை துவக்கி வைத்தனர்.

ஜனவரி 1ஆம் தேதி காஞ்சிமா நதியிலிருந்து அம்மன் சிங்க வாகனத்தில் ஆனந்தமாய் எழுந்தருளச் செய்து கரக ஸ்தாபனத்துடன் ஊர்பவனி வந்து கோவிலில் சேர்ப்பித்தல், அம்மனுக்கு மலர் பூஜைகள், அக்னி சட்டி பூ இறைத்தல்,குத்து விளக்கு பூஜை, பூச்சட்டி எடுத்து மஞ்சள் நீராடுதல், மாவிளக்கு எடுத்தல் என ஜனவரி 10-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

இந்த கால்கோல் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமியை வழிபட்டனர்.

மேலும் படிக்க