March 13, 2018
தண்டோரா குழு
இந்திய அரசு நிதி ஆயோக் மூலம் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் ஆடல் டிங்கேரிங் லேப்களை நிறுவ திட்டமிட்டது. இதில் தேசிய அளவில் பதிமூன்றாயிரம் பள்ளிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் நிதி ஆயோக் 257 பள்ளிகளை தேர்ந்தெடுத்தது.
இதில் கோவையில் தனியார் பள்ளி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பள்ளியில் பயிலும் மாணவ மணவிகளுக்கான அறிவியல் ஆய்வகம்,மின் நுட்பவியல்,ரோபோட்டிக்ஸ்,மைக்ரோ,திரிடி பிரிண்டர், கன்ட்ரோலர், ஆகிய உபகரணங்களை வைத்து தங்களுடையை திறமையை வெளிக்காட்டும் நிகழ்வு காட்சிகள் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் காட்டினர்.