• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

February 7, 2020

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முல்லைக்கொடி. இருவருக்கும் திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகி உள்ளது. மகள் நந்தினி (14) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். முத்துகுமார் , முல்லைக்கொடி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக முல்லைக்கொடி மகள் நந்தினியுடன் காமராஜ்நகர் பகுதியில் கவுரி என்பவர் நடத்தி வரும் ஆதரவு இல்லத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் ஆதரவு இல்லத்தில் இருந்த நந்தினி திடீரென உள் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க