July 5, 2021
தண்டோரா குழு
விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு,விஜய் மக்கள் இயக்கம் குறிச்சி நகர இளைஞரணி சார்பாக,பள்ளி மாணவிக்கு ஆண்ட்ராய்டு போன் வழங்குதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளரும்,முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸி ஆனந்த் இந்த மாதம் 18 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.இந்நிலையில் இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக குறிச்சி நகர இளைஞரணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுகுணாபுரம் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்க கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இதில்,குறிச்சி நகர தலைவர் பைசல் தலைமை தாங்கினார்.
இதில்,பள்ளிகள் இல்லாத நிலையில் ஆன்லைன் கல்வி பயில ஏழை மாணவிக்கு ஆண்ட்ராய்டு ஃபோன்,விபத்தில் காயமடைந்த ஏழை தொழிலாளிக்கு 5000 ரூபாய் நிவாரண தொகை, கொரோனாவால் பாதித்து வருமானமில்லாமல் தவித்த குடும்பத்திற்கு நிதி உதவி,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி,மற்றும் மளிகை பொருட்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் அந்த பகுதி பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வுட்ஸ் குப்புராஜ்,பாரதி சுகுமார் மற்றும் இளைஞரணி மாவட்ட நிர்வாகி எட்டிமடை பாலு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் இரும்பு கடை அக்கீம், முகம்மது அலி,ரமேஷ், சிவபாலன், சந்தோஷ், மெர்சல் செந்தில்,ரபீக்,ஆசிக், மாஸ்டர் செந்தில், மகேந்திரன், ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.