• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவர்களுடன் கலந்து உரையாடிய நடிகர் அபிஷேக் பட்சன்

December 16, 2019 தண்டோரா குழு

சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியினர் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சன் ஆகியோர் இன்று கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடினர்.

தமிழகத்தை சேர்ந்த கால்பந்து அணியான ‘சென்னையின் எஃப்.சி’ மற்றும் அந்த அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சன் ஆகியோர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி இன்று அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை எஃப்.சி அணியின் கால்பந்து வீரர்கள் எட்வின் சிட்னி வன்ஸ்பவுல், அனிருத் தபா, மசிஹ் சைகானி,ஆன்ரீ ஸ்கிம்பரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ் ஆகியோர் கால்பந்து வீரர்கள் மற்றும் நடிகர் அபிஷேக் பட்சனுக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மாணவர்களிடையே அபிஷேக் பட்சன் பேசுகையில்,

“இந்த கால்பந்து அணியின் பெயர் தான் சென்னை எஃப்.சி ஆனால் இது ஒரு தமிழக அணி. இந்த அணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிப்பருவம் என்பது ஒரு வரம். இந்த பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் மதித்து நடக்க வேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க