• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி பேருந்துகள் மோட்டார் வாகன விதிமுறையின் படி உள்ளதா – ஆட்சியர் ஆய்வு

May 21, 2019 தண்டோரா குழு

பள்ளி பேருந்துகள் மோட்டார் வாகன விதிமுறையின் படி உள்ளதா என கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வு துவங்கியது.

பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கோவை மாநகரில் உள்ள 221 பள்ளிகளை சேர்ந்த 1172 பள்ளி வாகனங்கள் தரக்கட்டுப்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி வாகனங்களில் பிரேக், இன்ஞ்சின் ஆகியவற்றின் தரம், வாகன படிக்கட்டுகளின் உயரம், அவசர கால வழி முறையாக இயங்குகின்றதா என்பன உட்பட பல ஆய்வுகளுக்கு பின்னர் பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.இன்று துவங்கும் ஆய்வு ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவு பெறும். பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டை அடுத்து
அரசு பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளின் வேகம் குறித்து தனிக்கை செய்யப்படும் .பள்ளிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பள்ளி வாகனங்களுககென விதிக்கப்பட்ட வண்ணம் உட்பட்ட அனைத்து விதிகளும் பொறுந்தும் .விதிகளை மீறி பள்ளி வாகனங்கள் இயக்கும் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க