• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

March 5, 2020

கோவை அடுத்த சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணபதி பகுதியில் பள்ளிவாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னணி பொறுப்பாளர் ஆனந்தை நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய தையடுத்து கோவை அரசு மருத்துவமனை முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கோவை கணபதி ரூட்ஸ் நிறுவனம் எதிரில் உள்ள வேதம்பாள் நகர் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆனால், அது வெடிக்காததால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க