• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளிகள் திறப்பு – ஆர்வத்துடன் வரும் பள்ளி மாணவிகள்

January 19, 2021 தண்டோரா குழு

கோவையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இதையொட்டி நேற்று பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.பள்ளிகள் 10 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுவதை தொடர்ந்து பள்ளிகளில் நேற்று பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி களின் வளாகத்தில் காணப்பட்ட குப்பைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், நுழைவு வாயில், கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு சனிடைசர் பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இங்குள்ள ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கொரோனா தொற்று விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க