January 5, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வி.கே.புதூர் அருகே ராமனுஜநகரிலுள்ள ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து குளத்துப்பாளையம், கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.