April 24, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர பகுதிகளில் இடி,மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
கோவை மாவட்டத்தில் இம்மாதத்தில் இருமுறை இடி, மின்னலுடன் கனமழை பரவலாக பெய்த நிலையில், மூன்றாம் முறையாக மாநகர பகுதிகளில் அதேபோல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கோவை ராமாநாதபுரம், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், போத்தனூர், ஆவாரம்பாளையம், பாப்பநாயகன்பாளையம், அண்ணா சிலை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.
கடந்த வாரத்திலும், இந்த வார தொடக்கத்திலும் மழை பெய்த நிலையில், மீண்டும் இன்று மழை பெய்தது. முன்னதாக வெப்பம் வாட்டி வதைத்தால் பணிக்கு செல்வோர், தொழிலாளர்கள், தொழிமுனைவோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், கோடை மழை அந்த வெப்பத்தை தனித்து குளுமையான சூழலை ஓரளவுக்கு தந்ததை அடுத்து, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.