January 22, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 10நாட்கள் தொடர்ச்சியாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக நொய்யல் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையால் கோவை குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், கோவையில் காலை மேக மூட்டதுடன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.பின்னர் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. குறிப்பாக துடியலூா், கவுண்டம்பாளையம், கணபதி, வடவள்ளி, பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. காலையில் பெய்த மழையால் கோவையில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.