• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணி

June 15, 2019 தண்டோரா குழு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஊர் பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க நில அளவை செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு உள்ள உயர் மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இதையடுத்து, நில அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தற்போது நில அளவீடு செய்யும் பணிகள் செம்மாண்டம் பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் இருந்தபோதும் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை கலைந்து செல்ல மறுத்து எங்களுக்கு ஒரு நீதி கிடைத்த பின் போராட்டத்தை கைவிடுவதாக என்று தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க