May 4, 2021
தண்டோரா குழு
கோவையில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,கோவை மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இந்தநிலையில்,இன்று மாலை வேளையில் காந்திபுரம்,கணபதி, சரவணம்பட்டி, உக்கடம், பெரியகடைவீதி, சாய்பாபா காலனி, காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பாலசுந்தரம் சாலை, ரயில் நிலையம், நஞ்சப்பா ரோடு உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளிலும், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது.