March 5, 2018
தண்டோரா குழு
கோவையில் இயற்கை வழியில் மக்கும் வகையிலான பயோ பைகளை மாநகராட்சி ஆணையாளர் இன்று(மார்ச் 5)அறிமுகப்படுத்தி வைத்தார்.
கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் இயற்கை முறையில் மக்கும் பைகளை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் கடைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்,
மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தற்போது இந்த பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த பைகளை கேட்டு பெற வேண்டும் என கூறினார்.இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரை உருவாக்க முடியும் என கூறினார்.