April 14, 2018
தண்டோரா குழு
கோவையில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட கார்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லட்சுமி நாராயண கல்யாண மண்டபத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மிக பிரமாண்டமாக பழைய கார்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது,
இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட கார்கள் இடம்பெறவுள்ளது.காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை இந்த கார் மேளா நடைபெறவுள்ளது.பழைய கார்கள் விற்பனை வரலாற்றில் முதல் முறையாக ஸ்மார்ட் டிரைவிங் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும்,அனைத்து கார்களும் ஆவணங்கள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.விரைவான விற்பனைக்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளது.மேலும் விற்பனையாளர்களின் வசதிக்காக ஏல கவுண்டரும் திறக்கப்படவுள்ளது. 50 ஆயிரம் முதல் 50 லட்ச ரூபாய் வரையில் கார்கள் இடம்பெற உள்ளது. வாகனங்களை வாங்குவத்கராக சிறப்பு கடன் வசதிகளும் செய்து தரப்பட உள்ளது.