• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

June 26, 2019

கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணை நாளை மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா மூவரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் காவல்துறையினர் மனு தாக்கல் செய்ததை அடுத்து இன்று மதியம் 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். விசாரணை தொடங்கிய நீதிபதி எதிர்தரப்பு அவகாசம் கேட்டதால் நாளை மதியம் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிட்டார். மூன்று பேரும் நீதிமன்றத்திற்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்..

கடந்த 13ம் தேதி கோவை மாநகர காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் இல்லங்களில் விசாரணை மற்றும் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் மூன்று பேரும் போலிஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து 2 நாள் விசாரித்த போலிசார் மூன்று பேர் மீது சட்ட விரோத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போத்தனூர் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். போலிசார் விசாரணையில் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போன்று கோவையில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக விசாரணை தெரியவந்துள்ளதாக போலிசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க