• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பணத்திற்காக கால் டாக்ஸி ஓட்டுனரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தம்பதி கைது

February 12, 2022 தண்டோரா குழு

கடந்த 9ஆம் தேதி வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் தனியார் டாக்சி ஓட்டுனர் சனு மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததை தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 8ம்தேதி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸியில் பயணித்தது தெரிய வர அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவம் சேர்ந்து ஓட்டுநரை கட்டையால் அடித்தும் விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, 6100 ரூபாய் பணம், லேப்டாப் 20 க்கும் மேற்பட்டது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இருவர் மீதும் ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இரண்டு கொலை வழக்குகள், ஆயுத வழக்கு ஆகியவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

மேலும் படிக்க