January 29, 2018
தண்டோரா குழு
கோவையில் அரை நிர்வாணமாக இடுப்பில் இலைகளுடன் தேசிய கொடியை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் 7 வது வார்டை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர், இன்று ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும் அவர், இடுப்பில் இலைகளை கட்டிக் கொண்டு, மண்டை ஓடுகளை கழுத்தில் அணிந்து , தேசிய கொடியை ஏந்தியவாறு பட்டாகோரி போராட்டம் நடத்தினார். பட்டாக் கோரி இரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும் , எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று நூதன முறையில் தர்ணா நடத்தியதாகவும், பட்டா கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.