June 11, 2022
தண்டோரா குழு
பட்டபகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்நிலையில் இன்று மதிய அக்கோவில் பகுதியில் வந்த வட மாநில நபர் ஒருவர் கோவிலை நோட்டமிட்டு கொண்டிந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்றதாக தெரிகிறது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் எல்லை ரோந்து பணி காவலர்கள் அந்த வட மாநில நபரிடம் விசாரணை நடத்தினர். யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் வடமாநில மொழியில் திரும்ப திரும்ப ஒரே வார்த்தை சொல்லி கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்து சென்றனர்.
பட்டபகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.