March 26, 2018
தண்டோரா குழு
நீராபானம் உற்பத்தி செய்வதற்கு தேவையான பொருட்களை பெற நிதியுதவி தேவை என கோவை விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், புதியதாக அமைக்கப்பட்ட பூச்சி அருங்காட்சியகத்தை திறந்து வைக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து மனு கொடுத்தனர்.அதில் நீராபானம் இறக்குவதற்கு தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், நீராபானத்தை இறக்க பொருட்கள் பல வாங்க உள்ளதாகவும் எனவே உடனடியாக நிதியுதவி அளித்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என வலியுறுத்தி இருந்தனர்.
மேலும்,நீராபானம் இறக்கும் கூட்டுறவு சங்கத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி தேவைப்படுவதாகவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.இந்த விவகாரத்தில்,விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என வேளாண் முதன்மை செயலரிடம் தமிழக முதல்வர் கூறினார்.