February 5, 2018
தண்டோரா குழு
கோவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க கோரியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக , திக , மதிமுகப், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50 க்குக் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நிறைவேற மத்திய அரசிற்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மேலும்,பன்முக கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா போன்றொரு நாட்டில் ஒரே முறை தேர்வு என்பதை ஏற்க முடியாது என்பது போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.