• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாள் ஒன்றிற்கு 6000 பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ஆணையர்

January 6, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றிற்கு 1300 பரிசோதனை செய்யபட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து 6000 பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆனையர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் வீடு வீடாக சென்று கொரனா பரிசோதனையில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு சோதனை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 முன்கள பணியாளர்களுக்கு வெப்பமானி, பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கோவை மாநகராட்சி ஆனையர் ராஜகோபால் சுங்கரா வழங்கினர்.

இதனையடுத்து முன்கள பணியாளர்கள் வீடு வீடாக சென்று என்னென்ன பரிசோதனைகள் செய்யவேண்டும் என்ற அறிவுறை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர்,

மாநகராட்சி முழுவதும் வீடு வீடாக சென்று கொரனா பரிசோதனை செய்யும் 500 முன்கள பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கபட்டுள்ளது. அவர்கள் மக்களின் அறிகுறிகளை கேட்டு காய்ச்சல், உடல் வெப்பம், உடலின் ஆக்சிஜன் அளவுகளை சோதனை செய்வர். மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஆர்.எஸ்.புரம் கலை அரங்கத்தில் கட்டுபாட்டு அறை ஏற்படுத்தபட்டுள்ளது.பிஇதில் கொரனா சோதனை முடிவுகளை தெரிவிக்கப்படும், தொற்று ஏற்பட்டவர்களை சோதனை மையத்திற்கு செல்ல வாகன ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

வீட்டில் தனிமை படுத்திகொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கபடும் என்றவர் 0224585800 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து கொடிசியாவில் ஹால் டியில்350 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. ஹால் இயில் மேலும் 300 படுக்கை வசதிகள் இன்று தயாராகும் என்றார். தொற்றின் பரவலுக்கு ஏற்ப நாள் ஒன்றிற்கு 500 முதல் 4000 வரை தொற்று உருதியானால் 15 மருத்துவர்கள், 75 செவிலியர்கள், 10 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கபடுவர்.

நாள் ஒன்றிற்கு 1300 பரிசோதனை செய்யபட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து நாள் ஒன்றிற்கு 6000 சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆர்டர் கொடுக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க