• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் – 1.5. லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு !

October 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 7வது மெகா தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை நடக்கிறது. இதில் 1.50 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 6 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 861 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை 7 வது மெகா தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 271 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 841 முகாம்களும் என மொத்தம் 1112 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இம்முகாமில் சுமார் 1.50 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க