கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ சிறுவாணி ரோடு சாலையில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் ஆனந்தன். இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆனந்தம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு திண்டுக்கல் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது.மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த்து.
இதுதொடர்பாக ஆனந்தன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த வடவள்ளி போலீசார் 4மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 குற்றவாளிகளை கைது செய்தனர். கைது செய்த குற்றவாளிகளிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்