December 13, 2020
தண்டோரா குழு
கோவையில் 25 வது வட்ட கழகம் காந்திமாநகரில் டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அ.மு.மு.க.வினர் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 25 வது வட்ட கழகம் காந்திமா நகர் பகுதியில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர் அப்பாதுரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதில் வார்டு அவை தலைவர் பேராசிரியர் சேகர், 25 வது வட்ட கழக செயலாளர் கணேசமூர்த்தி, மற்றும் பகுதி நிர்வாகிகள் சாந்தகுமார் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகுமார் தமிழ்ச்செல்வன் மகளிரணி ஆலிஸ் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.