November 3, 2020
தண்டோரா குழு
கோவையில் நள்ளிரவில் பெய்த திடிர் கனமழையால் நகரின் ரயில்நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீர் சூழ்ந்ததுள்ளது.
தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே கடந்த தின தினங்களாக கோவை கடும் வெப்பம் நிழவி வந்தது.
இந்நிலையில் நள்ளிரவு 3 மணியில் இருந்து கோவை ரயில்நிலையம், பூ மார்க்கெட், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்து. இந்த கனமழையால் ரயில் நிலையம் அருகே சப்வே நீரில் மூழ்கியது. பெரும்மபாலான இடங்கள் , சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் ராட்ஷச மோட்டார் மூலம் தேங்கிய நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.