November 22, 2020
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் திருவெங்கட சாமி ரோட்டில் நம்ம கேஃப் என்ற பெயரில் புதிய டீ கடை தொடங்கப்பட்டுள்ளது.
இக்கடையை மாதம்பட்டி ரங்கராஜ் திறந்து வைத்தார்.விழாவிற்கு வந்த அனைவரையும் நம்ம கேஃப் நிர்வாக இயக்குநர் சி.கே.குமாரவேல், தமயந்தி ஆகியோர் வரவேற்றனர்.விழாவில் இயற்கை விஞ்ஞானி மயில்சாமி மற்றும் பிராகரிதி, ஹரிஜா,சதீஷ், ஜெய் ஆனந்த்,சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நம்ம கேஃப் நிர்வாக இயக்குநர் சி.கே.குமாரவேல் கூறுகையில்,
நம்ம கேஃப் டீ கடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு டீ தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டி டீ, சுக்குமல்லி டீ, உள்பட பல்வேறு டீ கிடைக்கும்.வரும் 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் முடிய 1000 கடைகள் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.