• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற RTI களப்பணியாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

September 16, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்றRTI களப்பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள RTI – ஆர்வலர்களை ஒருங்கிணைப்பது , RTI ஆர்வலர்களுக்கு அது குறித்த சட்டத்தை முறையாக கையாள பயிற்சி அளிப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஆர்வி ஓட்டல் அரங்கில் RTI களப்பணியாளர்கள் விருது வழங்கும் விழா மற்றும் மாநில ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.குறிப்பாக,தமிழ்நாட்டில் உள்ள RTI – ஆர்வலர்களை ஒருங்கிணைப்பது , RTI ஆர்வலர்களுக்கு அது குறித்த சட்டத்தை முறையாக கையாள பயிற்சி அளிப்பது, தமிழகத்தில் RTI ஆர்வலர்கள் வெளியிட்ட சட்ட செய்திகளை தனித்தனி தலைப்புகளில் வெளியிடுதல், ஒவ்வொரு களப்பணியாளர்களின் பெயரில் அவர்கள் வெளியிட்ட தகவல்களை அவர்கள் பெயரில் வெளியிடுவது, தமிழ்நாடு , ஆந்திரா , கர்நாடகா , கேரளா மாநில RTI ஆர்வலர்கள் கலந்தாய்வு செய்து தமிழக தகவல் ஆணைய நடவடிக்கையை மேம்படுத்துத்துவது, தமிழக RTI ஆர்வலர்களை மாவட்ட வாரியாக இணையத்தில் பெயர் . மாவட்டம் தாலுகா , செல் நம்பர் பதிவு செய்து மாநில RTI ஆர்வலர்கள் கையேடு வெளியிடுதல் , பொது மக்கள் , மாணவர் , மகளிர் ஆகியோர்க்கு RTI பயனாளிகளின் நேர்காணல் செய்து அவர்கள் அடைந்த நன்மைகளை கூற வைத்து குறும்படம் தயாரித்து வெளியிடுவது, RTI ஆர்வலர்களை அவர்களின் பாதுகாப்புக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுதல், தமிழ்நாடு ஆணையத்தில் சட்டப்படியில்லாத தீர்ப்புகளை நீதி மன்றம் மூலம் முறைபடுத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்RTI ஆர்வலர்கள் சங்க நிர்வாகிகள் சின்னராஜ்,செல்வராஜ் மற்றும் பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் கருணாநிதி,கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க