• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற ’60வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு

November 12, 2022 தண்டோரா குழு

பல்வேறு ஜவுளி மற்றும் பின்னலாடை அமைப்புகள் சார்பில் கோவை தென்னிந்திய பின்னலாடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ’60வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு’ நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில், ஜவுளி மற்றும் பின்னலாடைத் துறையின் வளர்ச்சி குறித்த அம்சங்கள் தொழில்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,சிறப்புரையாற்றிய அமைச்சர்,

தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறையில் தொழில்நுட்ப ஜவுளி குறித்த ஆராய்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜவுளி துறையில் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சென்னையில் நடைபெற உள்ள ஜவுளித்துறை தொழில்நுட்ப மாநாட்டிற்கு சர்வதேச அளவிலான நிறுவனங்களை அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க