December 7, 2025
தண்டோரா குழு
கோவையில் ஐயப்ப சுவாமி படி பூஜை விழா: ஐயப்பன் பஜனை பாடல்களை பாடி சிறப்பு வழிபாடு -18 படிகளின் சிறப்புகளின் அடையாளமாக 108 குருசாமிகளுக்கு படிகள் வழங்கினர்.
கோவையில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மற்றும் கோவை மக்கள் சேவை மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஸ்ரீ ஐயப்ப சுவாமி படி பூஜை விழா இன்று மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நொய்யல் ஆற்று டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ சுவாமி அஜித் சைதன்யா பூஜையைப் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவிற்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அகில பாரத தலைவர் ஈரோடு ராஜன் மற்றும் மாநில நிர்வாக செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற விவகார இணைச் செயலாளர் முரளிதரன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சபரிமலை ஐயப்பனின் 18 படிகளின் சிறப்பையும், அந்தப் படிகளைக் கடந்து செல்வதன் தத்துவத்தையும் குறிக்கிற வகையிலும், இந்தப் படிகள் மனிதனின் 18 விதமான உலக ஆசைகளைக் குறிக்கிறது, அவற்றைக் கடந்து சென்றால் இறைவனை அடையலாம் எனவும் இந்தப் படிகள் விநாயகர், சிவன், விஷ்ணு, சூரியன், சந்திரன் உள்ளிட்ட 18 தெய்வங்களைக் குறிக்கின்றன, பக்தர்கள் விரதம் இருந்து 18 படிகளை ஏறி ஐயப்பனைத் தரிசிப்பது சிறப்பான வழிபாடாகக் கருதப்படுகிறது. இதனையொட்டி 108 குருசாமிகளுக்கு படிகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி ஐயப்பனை வழிபட்டு சிறப்பித்தனர்.