• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற விஸ்வரூபம் & மாயத்தோற்ற உலகில் வேலை வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கு

November 15, 2019 தண்டோரா குழு

விஸ்வரூபம் & மாயத்தோற்ற உலகில் வேலை வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கு ஹாஷ் 6 ஹோட்டலில் நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டியில் கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் விஸ்வரூபம் மற்றும் மாயத்தோற்ற உலகில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. டிஜே கல்வி மற்றும் பயிற்சி நிறுவன தலைமை செயல் அதிகாரியும், மாயா அகாடமி ஆப் அட்வன்ஸ்டு சினிமேட்டிக் (மாக்) நிறுவனத்தின் பங்குதாரருமான டாக்டர் சம்ஜித் தன்ராஜன், இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில், புதிய வடிவமைப்பு துறையில் தேவைப்படும் திறன், அடுத்த 20 ஆண்டுகளில் தொழிலில் உள்ள வளர்ச்சி பற்றி விளக்கம் தரப்பட்டது. விஸ்வரூபம் மற்றும் மாயத்தோற்ற உலகில் அவசியமான கற்பனை வளங்கள், உருவாக்கும் முறைகள், எதிர்கால வாய்ப்புகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. கோவை மற்றும் அதை சுற்றியுள்ள கல்லுாரிகளை சேர்ந்த இயக்குனர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி துறை தலைவர்கள் உள்ளிட்ட 33 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்த வடிவமைப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி பற்றியும், அதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டும் இவர்கள் அறிந்து கொண்டனர். கல்லுாரிகளிடமிருந்து இந்த கருத்தரங்கிற்கு அமோக வரவேற்பு இருந்தது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. பலர், தங்கள் எதிர்பார்த்ததற்கும் மேல் நன்றாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். டிஜே கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விருந்தோம்பல் நன்றாக இருந்தது என்றும், அடுத்து வரும் வகுப்புகளில் பங்கேற்பதாக கூறினர்.

டிஜே கல்வி மற்றும் பயற்சியின் துவக்கமாக இத்தகைய கருத்தரங்குகள் நடத்தப்பட்டள்ளது. இது நாட்டின் திறமை மிக்க இஞைர்களின் தேவையை உயர்த்தி, நாட்டின் எதிர்காலத்தில் பங்கேற்க உதவும். கடந்த 80 ம் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப வலிமை, 90 களில் வெளிப்பட்டது போன்று இதிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. இதே போன்று அனிமேஷன் வாய்ப்புகள் உள்ளன. இந்த துவக்கம், மீண்டும் ஒரு தகவல் தொழில்நுட்ப வெற்றியை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிகழ்த்தும். கடந்த ஆண்டுகளை போன்றே, டிஜிட்டல் இந்திய புரட்சியில், சர்வதேச அளவிலான திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றுவது மலிவானதாக இருக்கும். இதற்கான மாபெரும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க