• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற ‘ரன் ஃபார் வீல்ஸ்’ மாரத்தான்

August 20, 2023 தண்டோரா குழு

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது.

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்திய இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இதில், மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி சாதாரண பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாராத்தான் போட்டிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ,மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.3,5,10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியின் முடிவில் தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க