• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

December 28, 2021 தண்டோரா குக்கு

மாற்றுதிறனாளிகளுக்காக பிரத்யேகமாக அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கான தளம் அமைத்துக்கொடுக்கும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் “Abled Kovai Trophy” நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்த ஆண்டிற்கான
“Abled Kovai Trophy” போட்டிகள்
கடந்த ஞாயிறன்று டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்ராக்ட் கிளப் ஆப் கேலக்சி கோயமுத்தூர் இணைந்து குனியமுத்தூர் நூர்சேட் பள்ளியில் வைத்து நடத்தியது.

இந்தநிகழ்வை,கோவை காவல்துறை இணை ஆனையாளர் ரகுபதி ராஜா தேசிய கொடியை ஏற்றி துவங்கி வைத்தார்.மேலும் சர்வேதேச அளவில் பங்குபெற்று பதக்கங்களை வென்ற சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.இந்நிகழ்வில், பார்க் இன்ஸ்டிட்யூட்சன் சேர்மன் Dr. அணுஷா ரவி, ரத்னம் கல்லூரி இயக்குனர் Dr. நாகராஜ், நூர்சேட் குரூப்ஸ் தலைவர் கமால் மற்றும் செயலாளர் இம்ரான்கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர். P.S உமர் ஃபாரூக் மற்றும் SIO தலைவர் ஆஷிக் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் CP ஃபுட்பால், பாரா சிட்டிங் வாலிபால், பாரா ஷாட் புட், வீல்சேர் பாஸ்கெட்பால் ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட S.P. அன்பரசன் பரிசுகள் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.

மேலும், பரிசளிப்பு விழாவில் ஹம்சா CEO Indobionics, S.A வெஜிடபிள்ஸ் உரிமையாளர் SA பஷீர், JRD REALTORS நிறுவனர் டாக்டர்.ராஜேந்திரன், ஸ்ட்ரீட் அரேபியா நிறுவனர் சஹபத், JIH மக்கள் தொடர்பு செயலாளர் M.அப்துல் ஹக்கீம், கோவை மொபைல் சங்க தலைவர் மன்சூர், Saji Garments உரிமையாளர் ஃபைசல், TFSC தலைவர் சர்ஜூன், Rotaract கிளப் தலைவர் பிரியதர்ஷினி மற்றும்.ரோகிணி, TMS அப்பாஸ் மற்றும் பலரும் கலந்துகொண்டு கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினர்.

நடைபெற்ற இப்போட்டிகளில் பரிசை தட்டிச் சென்றத அணிகள்,

பாரா ஃபுட்பால்- சேலம் அணி

பாரா சிட்டிங் வாலிபால்-கோயமுத்தூர் அணி

பாரா ஷாட்-புட் (மகளிர் பிரிவு)-திருமதி.ஹேமா

வீல்சேர் பாஸ்கெட்பால் (ஆண்கள் பிரிவு)- சென்னை அணி,

வீல்சேர் பாஸ்கெட்பால் (பெண்கள் பிரிவு)- கோயமுத்தூர் அணி.

மேலும் படிக்க